பெரு நாட்டில் பயணிகள் பஸ் ஒன்றும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரு நாட்டின் புனோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த லொறி வேக கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியே குறித்த விபத்து சம்பவத்துள்ளது.

இதனால் ஒரு குழந்தை மற்றும் 12 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் 39 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.