நீர்கொழும்பு பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பொருதொட்ட பகுதியில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2.6 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.