பொகவந்தலாவ - ஜேப்பல்டன் பூசாரி தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தரக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். 

அத்துடன், இதுவரையிலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து மலையக அரசியல் தலைவர்கள் மௌனம் காப்பது பெரும் கவலையளிப்பதாக உள்ளது எனவும், அவர்கள் கூறினர். 

இதேவேளை, தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு முடிவு கிடைக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

பொகவந்தலாவ நிருபர்