(நா.தனுஜா)

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளமையினை நாம் வரவேற்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானோரின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவிற்கு காணப்படும் நிலையில் இத்தகையதொரு கருத்தினை சபாநாயகர் முன்னரே வெளியிட்டிருக்க வேண்டும். ஆனாலும் காலங்கடந்தேனும் சபாநாயகர் தமது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளமையினையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சபாநாயகரின் கருத்திற்கு வரவேற்புத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.