(எம்.நியூட்டன்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சின்னப் பையன் அவர் கதைப்பதை யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார் .

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் அதிலிருப்பவர்களையும் தொடர்ச்சியாக விமர்சிப்பதால் தீர்வு கிடைத்தவிடுமென்று கஜேந்திரகுமார் நினைக்கக் கூடாது. அவர் தான் என்ன செய்யப் போகின்றார் என்பதை முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் அமைப்பை வெளியேற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ள விடயம் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.