(எம்.நியூட்டன்)

இலங்கையின் அரச அதிகாரக் கட்டமைப்புக்குள் தமிழ்மக்களுடைய நலனைப் பேணுவது என்பது மிகவும் சிக்கலான விடயம். இதனை சர்வதேச சமூகத்திடம் காட்டவேண்டியது கட்டாய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளது என  சிரேஷ்ட சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சமஷ்டியும் வடக்கு - கிழக்கு இணைப்பும் தான் உயிருடன் இருக்கும் வரை நடைபெறாது எனக் கூறியமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் அங்கு எந்தக் கட்சி என்றாலும் பெரும் தேசிய வாதத்தை மீறிச் செயற்பட முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்  இது தான் நிலை  இதன் காரணமாகத்தான் தான் பெருந்தேசிய வாதத்துடன் நிற்கிறேன் என்பதைக் காட்டவேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கு இணைப்பு சமஷ்டித்தீர்வு போன்றவை தான் உயிருடன் இருக்கும் வரை நடைபெறாது என்பதை கூறியுள்ளார். இதுதான் உண்மையான நிலையும் கூட.

தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் அங்கு எந்தக் கட்சி என்றாலும் பெரும் தேசிய வாதத்தை மீறிச் செயற்படமுடியாது. இதன் வெளிப்பாடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடைய தற்போதை நிலையுள்ளது. அவருடைய எதிர்கால இருப்பு, எதிர்காலத் தேவை முக்கியமாகவுள்ளது. இதற்காகத்தான் தான் பெருந்தேசிய வாதத்துடன் நிற்கிறேன் என்பற்காக இதனைத் கூறியுள்ளார். தற்போதுள்ள பலவீனமான நிலையில் இது தேவையாகவுள்ளது. இதுவே உண்மையான யதார்த்தம் ஜனாதிபதி இதனை வெளிப்படையாகக் கூறிவிட்டார் மற்றவர்கள் இதனை வெளிப்படையாக கூறவில்லை. 

இந்த யதார்த்தத்தை நாங்கள் எவ்வாறு சர்வதேசத்திடம் முன்வைக்கப்போகிறோம் என்பது தான் எங்கள் முன்னுள்ள சவால் ஆகும். 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அதியுச்ச அரசாங்கமானது இரண்டு கட்சிகளை ஒன்றிணைத்த தேசிய அரசாங்கம் ஆகும். இத்தகைய தேசிய அரசாங்கத்தை அமைத்தே தமிழ் மக்களுடைய சிறிய எதிர்பார்ப்புக்ககளைக் கூட முழுமையாக செய்ய முடியவில்லை. இது அனைவருக்குமே படுதோல்வி ஏனெனில் இலங்கையின் அரச அதிகாரக் கட்டமைப்புக்குள் தமிழ்மக்களுடைய நலனைப் போணுவது என்பது மிகவும் சிக்கலான விடையம். இதனை சர்வதேச சமூகத்திடம் காட்டவேண்டியது கட்டாய பொறுப்புள்ளது. சர்வதேசம் தலையிட்டு எமக்கான தீர்வை முன்வைக்கவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. 

இதற்கு கட்டமை்பபு சார் இனப்படுகொலை நிறுத்தப்படவேண்டும். சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறை உருவாக்கப்படவேண்டும். குறிப்பாக எமது நிலத்தை, மொழியை, பொருளாதாரத்தை கலாச்சாரத்தை அழிக்காத வகையில் ஒரு பாதுகாப்புப் பொறிமுறை அவசியம். இதற்கான நியாயப்பாடுகள் வரலாற்றுற் ரீதியாக வந்துள்ளது.