கலைகலாச்சார விழாவின் "தேசபந்து விருது வழங்கல் விழா" வில் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சத்தியசீலன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் கடந்த 02 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை, வலஸ்முல்லை தேசிய பாடசாலையில் குறித்த விருது வழங்கும் விழா இடம்பெற்றது.

இதன்போதே சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சத்தியசீலனுக்கு உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.