மஹாஓயா பொலிஸ் பிரிவிலுள்ள நுவரகலதென்ன பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் காணாமல்போயுள்ளதான முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் தேடப்பட்டு வருவதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

 எஸ்.எம். திஸ்ஸஹாமி (வயது 62) எனும் கூலி விவசாயியே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி ஏ.ஜி. குசுமாவதி மஹாஓயா பொலிஸில் முறைபாட்டு வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

விவசாயக் கூலி வேலையிலீடுபடும் இவர் கடந்த முதலாம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும் இவரைத் தேடும் பணிகள் மட்டக்களப்பு - பதுளை வீதி காட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.