ரயில் போக்குவரத்துச் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட  பிரதான ரயில் பாதைகள் விஸ்தரிக்கப்படவுள்ளன. 

இதன்பிரகாரம், கொழும்பு - கோட்டையிலிருந்து வெயாங்கொடை ரயில் நிலையம் வரைக்குமான ரயில் பாதைகள்  விஸ்தரிக்கப்படவுள்ளதாக, கொழும்பு நகரமைய ரயில்வே அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் உபாலி மல்லிகாரச்சி தெரிவித்துள்ளார்.

இவ்வேலைத் திட்டத்தின் கீழ், கொழும்பிலிருந்து ராகம வரையில் நான்கு ரயில் பாதைகளாகவும்,  ராகமவிலிருந்து வெயாங்கொடை வரையில் மூன்று ரயில் பாதைகளாகவும் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வேலைத்திட்டம், 2018 ஆம் வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு, 2023 ஆம் வருட நடுப்பகுதியில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதிப் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.