முன்னாள் பிரதமரினால்தான் தமிழர்களுக்கான தீர்வு வழங்குவது தள்ளிப்போனது என்றும் அதனால்தான் பிரதமரை மாற்றி புதிய சபையுடன் நாட்டுக்குத் தேவையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க எத்தனிக்கிறேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிதத்தார். 

அத்தோடு அரசியல் கைதிகளுக்கு எதிர்வரும் நாட்களில் நல்லதொரு முடிவை கொடுக்கவும் தான் நடவடிக்கை மேற்கொண்டுவருதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சொன்னதுபோல நான் ஜனாதிபதியாகிய நாளில் இருந்து தீபாவளிப் பண்டிகையின் முக்கித்துவத்தை உணர்ந்து ஆண்டுதோரும் தீபாவளி விழாவை நடத்திவருகின்றேன். நாட்டில் அனைவரும் ஒற்றுமையாகவும் சுதந்திரபமாகவும் வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே நோக்கமாக இருக்கின்றது.

யார் எந்த மொழியானாலும், எந்த இனமானாலும் எனக்கு அது முக்கியமல்ல. அனைவரும் சம உரிமையுடன் இந்த நாட்டில் வாழ வேண்டும். என்னை ஜனாதிபதியாக்க தமிழர்கள் மிகப்பெரிய பங்காற்றினர். அதனை எனக்கு ஞாபகப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றனே். 

என்னைப் போல வடக்கு மற்றும் கிழக்கிற்கு அதிகளவில் பயணித்த ஜனாதிபதி யாராகவும் இருக்க முடியாது. அதேவேளை என்னைப்போன்று வட பகுதி மக்களுக்கு பணியாற்றிய ஜனாதிபதியாகவும் யாரும் இருந்ததில்லை. வட பகுதி மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ. அதனை நிச்சயமாக செய்யவேண்டும். பிரச்சினை தீரு்க்கப்படவேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. நாம் இதுவரையில் நிறைய விடயங்களை அவர்களுக்காக செய்தும் இருக்கிறோம்.

வடபகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 90 வீதமான பொதுமக்களின் காணிகளை விடுவித்திருக்கிறோம். வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி செயலணியை மூன்று முறை கூட்டியிருக்கிறேன். இந்த ஜனாதிபதி செலணியினால் 20 வருடமாக தீர்த்துவைக்கப்படாத பிரச்சினைகள் இதன் மூலும் தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட தமிழ்தேசியக் கூட்டமைப்பு அமைச்சர்கள் தெரிவித்தும் இருக்கிறார். 

தமிழர்களுக்கா அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சொன்னதுபோல ஒரே நாட்டுக்குள் தீர்வு காணப்படவேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன்.

ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்தப் பிரச்சினை தீரு்க்கப்படவில்லை. அதனால்தான் முன்னாள் பிரதமை நீக்கி நான் புதியவரை நியமித்தேன். ஜனாதிபதி என்பதால் நான் தனித்து ஒரு தீர்மானத்தை எட்டிவிட முடியாது. பாராளுமன்றமும் எமக்கு துணை நிற்கவேண்டும். கடந்த கடந்த மூன்றரை ஆண்டுகாக இது நடக்கவில்லை. அதனால் புதியப் பிரதமருடன் இணைந்து நாம் செயற்படுவோம். 

அரசியல் கைதிககள் விடயத்தில் அடுத்த வாரம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். அவர்களுக்கு மகிழ்ச்சியடைக்கூடிய முடிவொன்றை கொடுக்க நான் எத்தணிக்கின்றேன். பிரதமருடனும் இதுகுறித்து பேசி நல்ல முடிவுவொன்றை பெற்றுக்கொடுக்போம். எனக்குத்தேவை இந்த நாட்டில் நிரந்தர சமாதானம். அதனை ஏற்படுத்தி நான் எந்த முயற்சியையும் எடுப்பேன் என்றார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்த தீர்வுகள் பின்தங்கிக்கிடந்தமை என்னுடைய தவறல்ல என்பதனை நான் கவலையுடன் தெரிவித்துக்கொள்ளகின்றேன். அதனால்தான் நான் இந்தப் பிரதமை மாற்றினேன். 

அடுத்த தீபாவளிக்கு முன்னர் சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொள்கின்றேன். அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல் இந்த நாட்டை முன்னேற்றுவது கடினம் என்றும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்தார்.