ஈராக்கில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தொடர் குண்டுத் தாக்குதலில் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகளவில் வாழும் பகுதியை இலக்கு வைத்தே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டடுள்ளது.

அதற்கமைய பாக்தாத்தின் ஏடன் நகரில் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். அத்துடன் தர்மியா நகரில் இராணுவ வீரர்களின் அணிவகுப்பின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரு இராணுவ வீரரும், அல்-சாகா நகரில் அரசு ஊழியர் ஒருவரின் காரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஒருவரும், சர்தார் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவரும் உயிரிழந்துள்ளனர். 

இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.