வவுனியாவில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி, மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞர் மோட்டார் சைக்களில் சென்றபோது, போக்குவரத்து பொலிஸார் அவரை வழிமறித்துள்ளனர். இதன்போது இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனையடுத்து அவரை மடக்கிப் படித்த பொலிஸார், அவரிடம் மேற்கொண்ட சோனையின் குறித்த இளைஞன் சாரதி அனுமதிப்பத்திரமின்றி, மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரைக் கைது செய்துபொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவருக்கு 25000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.