(நா.தினுஷா) 

தேசிய அரசாங்கத்தின் கீழ் சர்வதேசத்தின் உறவுகள் இலங்கைக்கு கிடைக்பெற்றுள்ளதாக குரல் எழுப்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சர்வதேசம் ஒதுக்கிய நபரை பிரதமராக தெரிவு செய்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இது தொடர்பில் ஜனாதிபதி சர்வதேசத்துக்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு ஒரே தீர்வ , பாராளுமன்றத்தை கூட்டவேண்டும். ஆகவே சபாநாகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக பாராளுமன்றை கூட்ட வேண்டும் எனவும் பாராளுமன்றத்தின் கதவுகள் திறக்கப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படும் வரை ஐக்கிய தேசிய முன்னணியின் போராட்டம் நிறைவுக்கு வராது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

தொழிற்சங்கங்கள் இன்று கோட்டை பிரதான புகையிரத நிலையத்தின் முன்றலில் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.