வவுனியாவில் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக புகைப்பிடித்த ஒருவருக்கு இன்று வவுனியா நீதிமன்றத்தினால் 1000 ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியாவில் பொது இடம் ஒன்றில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் புகைப்பிடித்த நபர் ஒருவரைக் கைது செய்த பொலிசார் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயற்பட்ட குற்றத்திற்காக 1000 ரூபா நீதிமன்றத் தண்டம் நீதிபதியினால் விதிக்கப்பட்டு அபராதம் அறவிடப்பட்டுள்ளது.