பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை அரசாங்கம் நிரூபித்த பின்னர்  ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமையகமான சிறிகொத்தாவில் பாரிய பிளவுகள் ஏற்படும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, கட்சியின் தலைமைத்துவத்திற்காக கட்சிக்குள்ளே பாரிய நெருக்கடி ஏற்படும் என்றார்.

பொதுஜன பெரமுனவும் , ஸ்ரீ லங்கா சுதந்திர  முன்னணியும்  ஒன்றினைந்தே  தற்போது அரசியல் ரீதியில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு போதும் தனிமைப்படுத்தமாட்டோம் ஒன்றிணைத்தே எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டாடர்.

பொதுஜன பெரமுனவின்  தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்   சந்திப்பில்  கலந்துகொண்டு  கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.