மகிந்த ராஜபக்சவை பிரதமராக அங்கீகரிக்காவிட்டால் நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரிய பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

சபாநாயகர் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் செயற்பட்டால் அவரை மாற்ற முயல்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

நவம்பர் 14 ம் திகதிக்குள் புதிய அரசாங்கத்தினால் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி 116 உறுப்பினர்களின் கையெழுத்துடன் சமர்ப்பித்த தீர்மானம் தற்போது மாறிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கையெழுத்திட்ட சிலர் தற்போது புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர் 14 ம் திகதி இது தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையிலிருந்து வெளியேற மறுத்தால் மக்கள் வெளியேற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.