வெளிநாட்டு பெண்ணொருவர் உடையது என சந்தேகிக்கப்படும் துண்டிக்கப்பட்ட தலை, பண்டாரகம – பொல்கொல்ல பாலத்திற்கு அருகாமையிலுள்ள கிளை வீதியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

இந்த தலைப்பகுதி, சீனா அல்லது தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிப்பதாகவும், சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டு அவரின் தலை குறித்த இடத்தில் கைவிட்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் எம்பிலிப்பிட்டிய, செவனகல  குளத்திலிருந்து தலை மற்றும் கால்கள் இன்றி சடலமொன்றினை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸார் மீட்டுள்ளனர். 

மேலும், மீட்கப்பட்ட தலைப்பகுதியும், முண்டமும் ஒரே பெண்ணுடையதா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.