ஹட்டன் நகரில் காணப்படும் அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டமையால் மக்கள் பல அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

தமது கடிதங்கள் பரிமாற்றம் செய்து கொள்ள பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் இவ்வாறு மக்களின் அன்றாட அஞ்சல் சேவைக்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைக்கப்படுவதை அஞ்சலக அதிபரும் அட்டன் நகரயினரும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.