மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டுறவுச் சபைக்கு சொந்தமான கட்டத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை இராணுவம் முழுமையாக வெளியேறியுள்ளது.

குறித்த கட்டடம் இராணுவத்தினரால் மன்னார் பிரதேசச் செயலகத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி மன்னார் நகர உதவி பிரதேச செயலாளர் சிவசம்பு கணகாம்பிகையினால் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

எனினும் குறித்த கட்டடத்தில் இருந்த இராணுவம் முழுமையாக வெளியேறவில்லை.அவர்கள் வெளியேற கால அவகாசம் கோரி இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த கட்டடத்தில் இருந்த இராணுவம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் முழுமையாக வெளியேறியுள்ளது.