பிறந்ததுமே கேஎப்சி நிறுவனப் போட்டியில் 11 ஆயிரம் டொலர்களை பரிசாகப்பெற்ற அதிஷ்டக் குழந்தை...!

Published By: J.G.Stephan

05 Nov, 2018 | 11:52 AM
image

பொதுவாக சிக்கன் என்றதும் அனைவரினதும் நினைவுக்கு உடனடியாக வருவது கேஎப்சி தான். இந்நிறுவனம், அமெரிக்காவில் ஹார்லாண்ட் ரோஸ் எனப் பெயர் வைக்கப்பட்ட குழந்தைக்கு 11 ஆயிரம் டொலர்களைப் பரிசாக வழங்கியுள்ளது. 

சமீபத்தில் இந்த நிறுவனம் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. அதாவது, 'நேம் யுவர் பேபி ஹார்லாண்ட்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட அந்தப் போட்டியின் படி, செப்டம்பர் 9ம் திகதி பிறந்த குழந்தைக்கு அப்பெயர் வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அத்தோடு ஹார்லாண்ட் என்ற பெயரில் அன்றைய தினம் அமெரிக்காவில் பிறந்த முதல் குழந்தையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

தங்களது நிறுவனரான சாண்டர்ஸின் பிறந்த தினத்தை ஒட்டி இந்தப் போட்டியை கேஎப்சி ஏற்பாடு செய்திருந்தது. அதன் 11 வகை மூலிகைகளைக் கொண்டு தயாராகும் சிக்கன் ஒன்றை விளம்பரப் படுத்தும் வகையில் 11 ஆயிரம் டொலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில், அன்னா பில்சன் , டெக்கர் பிலாட் தம்பதிகளின் குழந்தையான ஹார்லாண்ட் ரோஸ் எனப் பெயரிடப்பட்ட குழந்தை வெற்றி பெற்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right