மஹிந்தவின் பாதையிலேயே அரசாங்கமும் பயணிக்கின்றது

24 Nov, 2015 | 12:17 PM
image

விலைக்குறைப்பு என்ற பெயரில் 300 மில்லி யன் நிதிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வரவு–செலவுத் திட்டத்தில் தேசிய வருமானத்தில் 1584 பில்லியன் ரூபாய் மக்களின் நேரடி மற்றும் மறைமுக வரியில் அறவிடப்படுகின்றது.

கடந்த ஏழுமாத காலத்தில் சர்வதேச கடன் 60 ஆயிரம் கோடி ரூபாவாகும். இதையே நான்கரை மணிநேர வரவு–செலவு திட்டத்தில் அரசாங்கம் முன்வைத்துள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. வரவு–செலவு திட்டத்தை எதிர்த்தே வாக்களிக்கவுள்ளதாகவும் ஜே.வி.பி தெரிவித்தது.

மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று நடத்தப்பட செய்தியாளர் சந்திப்பின்போதே கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நிதியமச்சர் நான்கு மணிநேரத்திற்கு அதிகமான மிக நீண்ட வரவுசெலவு திட்டத்தை கடந்த 20ஆம் திகதி முன்வைத்தார். ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தில் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை உள்ளது என்ற கேள்விக்கு தெளிவான ஒரு பதில் இதுவரையில் கிடைக்கவில்லை.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் வருமானமாக 2047 பில்லியன் ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 15 பில்லியன் ரூபா தொகை பிரதானமாகக் கிடைக்கின்றது. வருமானமாக கிடைக்கும் தொகை 2032 பில்லியன் ரூபாவாகும். இந்த இரண்டு தொகையையும் இணைத்தே அடுத்த ஆண்டுக்கான வருமான தொகையான 2047 பில்லியன் ரூபாயை அரசாங்கம் முன்வைத்துள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டுக்கான செலவாக 2781 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இந்த அடிப்படையில் பார்க்கும் போது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையாக 740 பில்லியன் ரூபாவை தொகையை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் இது புத்தக அடிப்படையில் இருந்தாலும் நடைமுறையில் இந்த தொகையில் இலக்கங்கள் மாறுபடும். அரசாங்கம் குறிப்பிட்ட தொகை வருமானம் கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது. அதேபோல் குறிப்பிட்ட தொகையை விடவும் செலவு அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. கடந்த காலங்களில் இருந்த அரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தின் படி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த வருமானத்தை ஈட்ட முடியாமல் போய்விட்டது. அதேபோல் செலவும் அதிகமாகவே காணப்பட்டது. எவ்வாறு இருந்தாலும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் பிரகாரம் பற்றாக்குறையாகும் நிதித்தொகை 740 பில்லியன் ரூபாய்களாகும்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின்படி பற்றாக்குறையாகும் தொகை 675 பில்லியன் ரூபாய்களாகும். ஆனால் அடுத்த ஆண்டுக்கான தொகை இந்த ஆண்டின் தொகையை விடவும் அதிகமானதாகவே காணப்படுகின்றது. அப்படியாயின் இந்த ஆண்டுக்கான செலவினப் பட்டியல் அதிகரித்துள்ளது. ஆகவே இந்த அரசாங்கமும் என்னதான் கதை கூறினாலும் இவர்களாலும் வருமானத்தை அதிகரிக்க முடியவில்லை.

அதேபோல் இந்த வரவுசெலவு திட்டத்தின் படி வருமானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 2047 பில்லியன் ரூபாயில் 1584 பில்லியன் ரூபாய் வரி வருமானத்தின் மூலம் அறவிடப்படுகின்றது. மக்களிடம் அறவிடப்படும் நேரடி மற்றும் மறைமுக வரியின் மூலமாகவே இந்த தொகை அறவிடப்படுகின்றது.

இந்த ஒரு மாதகாலமாகவே பொருட்களின் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் விளம்பரப்படுத்திவந்தது. அதேபோல் இந்த வரவுசெலவுத் திட்டத்திலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மக்களை ஏமாற்றும் வகையில் ஓரளவு விலை குறைப்பும் மேற்கொள்ளப்பட்டது. இந்த விலை குறிப்பிற்காக அரசாங்கம் செலவிட்டுள்ள தொலை வெறுமனே 300மில்லியன் ரூபாய்கள் மட்டுமேயாகும். ஆனால் மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரித்தொகை 1584 பில்லியன் ரூபாய்களாகும். உதாரணமாக தேசத்தை கட்டியெழுப்பும் வரியாக 90ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் அறவிடப்படுகின்றது.

துறைமுக மற்றும் விமானநிலைய வரிப்பணம் 30ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் அறவிடப்படுகின்றது. அதேபோல் தொலைபேசி அழைப்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளுக்கான அழைப்பிற்கான தொலைபேசி அழைப்பு வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடவுசீட்டு வரி உள்ளடங்கலாக ஒருசிலவற்றை உள்ளடக்கி 75ஆயிரம் மில்லியன் ரூபாய் வரி அறவிடப்படுகின்றது.வரி சலுக்கைகாக ஒரு சிறிய தொகையை ஒதுக்கிவிட்டு ஏனைய அனைத்து பொருட்களினதும் வரி வீதத்தை இரண்டு மடங்காக்கி மக்களின் மீது வரியை குவித்துள்ளனர். இதுதான் நான்கு மணிநேரமாக நிதியமைச்சர் தெரிவித்த வரவுசெலவு திட்டமாகும். கடந்த காலத்தில் மஹிந்த செய்த அதே வேலையை இந்த அரசாங்கமும் செய்துள்ளது. முதல் இருந்ததை விட இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மடங்கு வரி அறவிடும் முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல் கடன் தொகையை பார்த்தாலும் முன்னைய அரசாங்கதைபோல் தான் இந்த அரசாங்கமும் செயற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சர்வதேசத்திடம் வாங்கிய கடன்தொகைதான் மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. குறுகிய காலத்தில் அதிக தொகையிலான சர்வதேச கடனை பெற்ற அரசாங்கமாக மஹிந்த அரசாங்கம் காணப்பட்டது.

வருமானத்தை விடவும் கடன் அதிகரித்த நிலைமையில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதேபோல் இந்த அரசாங்கமும் எந்தவித மாற்றமும் இல்லாது மஹிந்த அரசாங்கத்தை போலவே செயற்பட்டு வருகின்றது. கடந்த 2014ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் நாட்டின் கடன்தொகை 7390.9 பில்லியனாக இருந்தது. ஆனால் இந்த நல்லாட்சியில் ஜனவரியில் இருந்து ஜூலை மாதம் வரையில் இப்போது நாட்டில் இருக்கும் கடன் தொகை 7990.8 பில்லியன் ரூபாய்களாகும். கடந்த எழுமாத காலத்தினுள் இந்த அரசாங்கம் வாங்கியிருக்கும் கடன் தொகை 599.9 பில்லியன்னாகும். சரியான தொகை மதிப்பீடு செய்தால் 600பில்லியன் ரூபாய்களை கடன் தொகையாக பெற்றுள்ளனர். அப்படியாயின் இந்த புதிய அரசாங்கம் ஜனவரியில் இருந்து ஜூலை மாதம் வரையில் 60ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாக வாங்கியுள்ளனர்.

மஹிந்த அரசாங்கம் எவ்வாறு அதிக வடியில் கடன் பெற்றனரோ அதேபோல் இவர்களும் அதிக வட்டியிலான கடனையே பெற்றுள்ளனர். மஹிந்தவை விமர்சித்த ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று அதே பாதையில் தான் செயற்பட்டு வருகின்றது. அதேபோல் இப்போதிருக்கும் நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. அவ்வாறான நிலையிலும் இந்த அரசாங்கம் அதிக வட்டிக்கு கடன் பெற்றுள்ளது. ஆகவே இந்த அரசாங்கமும் வரி மற்றும் கடனில் தான் தமது ஆட்சியை கொண்டு செல்கின்றது.

அதேபோல் இந்த எழுமாத காலத்தில் இலங்கையின் ஏற்றுமதியானது 5 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. மஹிந்த அரசாங்கம் ஆட்சியை ஆரம்பித்தகாலகட்ட ஏற்றுமதியை விடவும் கடந்த ஆண்டு ஏற்றுமதியில் அதிக வீழ்ச்சிகண்டது.

இந்த அரசாங்கம் ஆட்சியை நடத்த ஆரம்பித்த குறுகிய காலத்தினுள் எமது நாட்டின் ஏற்றுமதி வீதம் குறைவடைந்துள்ளது. மேலும் வாகனங்களுக்கான வரி அதிகரித்துள்ளது. அதிலும் எரிபொருள் வாகனத்தின் வரி வீதத்தை விடவும் இலத்திரனியல் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளில் சூழல் பாதுகாப்பு என்ற கட்டமைப்பின் கீழ் இலத்திரனியல் வாகனங்களின் பாவனையை அதிகரிக்கும் வகையில் சலுகைகளை வழங்குவார்கள்.

ஆனால் இலங்கையில் அது தலைகீழாக நடைபெறுகின்றது. அதேபோல் உரமானியமும் தடைப்பட்டுள்ளது. கடந்த காலங்களைப் போல் அல்லாது நிதி வவுச்சர்களை வழங்க தீர்மானித்துள்ளனர். அரச சேவையாட்களுக்கான அடிப்படை சம்பளத் தொகையை 10ஆயிரமாக அதிகரிப்பதாக தெரிவித்தனர்.

அதேபோல் கசினோ வரி மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆனால் இந்த தொகை அடிப்படை சம்பளத்தில் உள்ளடக்கப்படவில்லை.கடந்த காலத்தில் கசினோ கொண்டுவரப்பட்ட போது முன்னணியில் இருந்து எதிர்த்தவர்கள் இப்போது காசினோவில் ஒரு அங்கமான ருஜினோ சூதாட்டத்தின் வரியை குறைத்துள்ளனர். அவர்களுக்கு வரி சலுகை வழங்கியுள்ளனர்.

அப்படியாயின் ருஜினோ சூதாட்ட நிறுவனத்தினருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது. மேலும் வெளிநாட்டவருக்கு இலங்கையில் நிலம் வாங்கும் சந்தர்பத்தில் அறவிடப்பட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எமது நிலங்களை வெளிநாட்டவர் இலகுவில் வாங்கி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு இந்த அரசாங்கம் முன்வைத்துள்ள வரவுசெலவு திட்டத்தை அவதானிக்கும் போது பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

மஹிந்தவின் பாதையில் தான் இந்த அரசாங்கமும் பயணிக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இப்போது பிரதான இரண்டு கட்சிகளின் ஆலோசனைக்கு அமையவே இந்த வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இதை நிறைவேற்றும் அளவிற்கு அவர்களின் அமைச்சர்கள் எண்ணிக்கை உள்ளது. எனினும் இந்த வரவுசெலவு திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கின்றது. வாக்கெடுப்பிலும் நாம் இந்த வரவுசெலவு திட்டத்தை எதிர்த்தே வாக்களிப்போம் எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25