கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணித்த மூன்று பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பிலிருந்து பொகவந்தலாவை, இரானிகாடு தோட்டப் பகுதியை நோக்கிப் பணித்த ஜீப் வண்டியொன்றே ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஸடெதன் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது.

இதனால் ஜீப் வண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 05:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.