மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்காக விரைவில் தேர்தல்கள் இடம்பெறவேண்டும் என  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் எங்களை ஆதரிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர் அவர்கள் எப்போதும் எங்களிற்கு எதிராகவே உள்ளனர் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்போது பிளவுபட்டுள்ளதால் நாட்டை நேசிக்கும் எவராவது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தால் அவர்கள்  மகிந்த ராஜபக்சவுடன் இணைவார்கள் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரச்செய்வதற்காக அவர்களிற்கு இலஞ்சம் வழங்குகின்றோம் என தெரிவிப்பது உண்மையில்லை எனவும்  கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறுகிய காலத்திற்கான அரசாங்கம் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச நாடு பயணித்துக்கொண்டிருந்த பாதையிலிருந்து அதனை காப்பாற்றுவதற்கு மக்கள் விரும்பினர் இதன் காரணமாக எங்களிற்கு வாய்ப்பு கிடைத்ததும் நாங்கள் அதனை கவிழ்த்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாங்கள் தொடர்ந்தும் ஆட்சி செய்வதற்கான அதிகாரம் எங்களிற்கு கிடைப்பதற்கு தேர்தல்கள் மூலம் மக்கள் ஆணை கிடைப்பது அவசியம் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.