கிளிநொச்சியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற ஜனநாயகம் மீறியதாக தெரிவித்து எதிர்ப்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி கண்ணன் கோவில் முன்பாக ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறாதே எனும் கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர். அத்தோடு மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கோசங்களையும் ஏழுப்பியவாறும் எதிர்ப்பு  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.