அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான பொருளாதார தடையை அமுல்படுத்துவதற்கு ஹோலிவுட் பட பாணியில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் விட்டுள்ளார்.

இந்த புகைப்படம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பட பாணியிலும் அதில் இடம்பெற்றுள்ள வாசகமான "சேங்ஷன்ஸ் ஆர் கம்மிங்" (SANCTIONS ARE COMING) ஸாம்பிக்கள் தொடரில் வரும் பன்ஞ் வசனங்களான "winter is coming." போன்று உள்ளது.

"SANCTIONS ARE COMING," இந்த வரியில் இடம்பெற்றுள்ள ''O'' என்ற எழுத்தில் உள்ள கோடுகள் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சின்னத்தை போன்றது. புகை சூழ்ந்த பின்னணியில் ட்ரம்ப் நின்று, ஹோலிவுட் சுவரொட்டியை போல பொருளாதார தடைக்கு ஃபர்ஸ்ட் லுக் விட்டுள்ளார் ட்ரம்ப்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேம் ஆஃப் த்ரோன்ஸின் காப்புரிமம் பெற்ற ஹச்.பி.ஓ,

''நாங்கள் எங்களது ட்ரேட்மார்க் லோகோவை எந்த அரசியல் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். இது குறித்து நாங்கள் எதுவும் இதுவரை அறியவில்லை" எனவும் கூறியுள்ளனர்.