இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் பதவியேற்றுள்ளனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

1. வாசுதேவ நாணயக்கார - தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்

2. தினேஷ் குணவர்தன - பெருநகரங்கள் மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்

3. கெஹலிய ரம்புக்வெல்ல - ஊடகத்துறை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்

4. கௌரவ ஆர்.டி.அசோக பிரியந்த - கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர்.