அதிகளவு மாற்று வேலைவாய்ப்புகள்

Published By: Robert

21 Mar, 2016 | 09:53 AM
image

வேலை தடங்­களை தேர்ந்­தெ­டுப்­ப­தா­னது சமு­தா­யத்தால் பெரு­மை­யா­கவும், கௌர­வத்­து­டனும் மதிப்­பி­டப்­ப­டு­கி­றது. குறித்த ஒரு­வரின் ஆர்­வமும், எண்­ணப்­பாடும் எந்த துறையை சார்ந்து உள்­ளதோ அந்த துறையை தேர்ந்­தெ­டுத்து வேலை செய்­வதே அவ­ருக்கும் சமு­தா­யத்­துக்கும் நன்மை பயக்கும்.

அண்­மைய everjobsஇலங்கை தொழில் அறிக்­கை­யி­லி­ருந்­தான தர­வு­களின் படி இலங்கை விளை­யாட்டு துறையில் அதி­க­ளவு மாற்று வேலை­வாய்ப்­புகள் காணப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

everjobs.lk இணைய தளத்­தி­னூ­டாக கடந்த 03 மாத காலப்­ப­கு­தியில் பட்­டி­ய­லி­டப்­பட்ட தொழில் வாய்ப்­பு­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்ற விண்­ணப்­பங்­களின் தர­வு­வி­ப­ரங்­களை தொழில்­வாய்ப்பு கணிப்­பு­க­ளுடன் ஒப்­பிடும் கவனக் குழுக்­களின் சிபா­ரி­சு­க­ளுக்கு அமைய, தொழில்­முறை விளை­யாட்டு அமைப்­பு­களில் விற்­பனை மற்றும் சந்­தைப்­ப­டுத்தல், மக்கள் தொடர்பு நிலை­களில் அதி­க­ளவு மாற்று வேலை­வாய்ப்­புகள் காணப்­ப­டு­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­தோடு விளை­யாட்டு நாளிதழ் மற்றும் இதர அச்சு, ஒலி­ப­ரப்பு மற்றும் ஒன்லைன் ஊட­கங்­களில் அதி­க­ளவு வேலை­வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன.

விளை­யாட்டு மருத்­துவம் மற்றும் விளை­யாட்டு உள­வியல் துறை­யி­லான நிபு­ணர்­க­ளுக்கும் இலங்­கையில் தற்­போது அதிக கேள்வி காணப்­ப­டு­கி­றது. விளை­யாட்டு வீரர்­களின் கடு­மை­யான மற்றும் நாள்­பட்ட காயங்­க­ளுக்­கான சிகிச்சை மற்றும் அவர்­க­ளது ஒட்­டு­மொத்த உடல் மற்றும் உள­வள ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்­து­வதில் மேற்­கு­றிப்­பிட்ட நிபு­ணர்­களின் பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

பெரும்­பாலும் ஆண்கள் மட்டும் ஆதி

க்கம் செலுத்­திய இலங்கை விளை­யாட்டு துறை­யா­னது, 2000ம் ஆண்டு இடம்­பெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்­டி­களில் இலங்­கையின் முன்னணி தட­கள வீராங்­கனை சுசந்­திக்கா ஜய­சிங்க பதக்கம் வென்றதை தொடர்ந்து கணிசமாக மாறிவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right