(இரோஷா வேலு) 

பேலியகொட சந்தியில் இன்று காலை ஹெரோயின் போதைப் பொருடன் இளைஞர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேலியகொட தொரண சந்தியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 5 கிரேம் 100 மில்லிகிரேம் ‍‍ஹெரேயினும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரை அளுத்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.