முன்னாள் அமைச்சர்கள் பலர் இன்று கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, காமினி ஜயவிக்ரம பெரோ, சம்பிக்க ரணவக்க, தயா கமகே, லகீ ஜயவர்தன, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலில் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று மாநாயக்க தேரர்களின் ஆசிரிவாதங்களை பெற்று கொண்டதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சூழ்சிகார அரசு எமக்கு வேண்டாம், பின்கதவு பிரதமர் எமக்கு வேண்டாம், கொலைகார ஆட்சி எமக்கு வேண்டாம், பொய்யன் எமக்கு வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேஷம் எழுப்பினர்.