வடக்கு சீனாவில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்த லொறியொன்று எதிரே வந்த கார்களுடன் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்ததுடன், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தினை அறிந்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சம்ப இடத்துக்கு விரைந்து வந்தது விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இது வரை இந்த விபத்தில் 14 பேர் பலியாகி உயிரிழந்துள்ளதுடன்,  மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இதனால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.