திருகோணமலை நகரில் உள்ள பிரதான ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகள் விற்பனைக்கு வைத்திருந்ததால்,  பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவத்திற்கு திருகோணமலை ஜெயசுமராமய விகாரையின் விகாராதிபதி ஸ்தலத்திற்கு சென்றுள்ளார். அத்துடன் குறித்த இடத்திற்கு திருகோணமலை தலைமையக பொலிஸார் விரைந்து சென்றதுடன் அப்பகுதி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, குறித்த வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட புத்தரின் தலை பொறிக்கப்பட்ட 5 பீஸ் ஆடைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.