சிரியாவில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் 14 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.

சிரிய அசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை ஒடுக்குவதற்காக சிரிய அரசு ஆதரவு படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், கிழக்கு சிரியாவின் ஹஜின் பகுதியில் அமெரிக்கா கூட்டுப் படையினர் மேற்கெண்ட திடீர் வான்வெளித் தாக்குதலில்  5 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித‍ உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.