இலங்கையை இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக தாரைவார்க்க அரசு முயற்சி

24 Nov, 2015 | 12:14 PM
image

"சீபா" உடன்­ப­டிக்­கைக்குப் பதி­லாக வேறொரு உடன்­ப­டிக்­கையை இந்­தி­யா­வுடன் கையெ­ழுத்­திட்டு இலங்­கையை இந்­தி­யாவின் 26 ஆவது மாநி­ல­மாக தாரை­வார்ப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தாகக் குற்றம் சாட்­டிய தேசிய சுதந்­திர முன்­னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீர­வன்ச, ‘தனுஷ்­கோடி” ஊடாக இந்­தி­யாவில் தொழில் இல்­லாமல் இருப்போர் இலங்­கையை ஆக்­கி­ர­மிக்கும் ஆபத்தும் உரு­வா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற வரவு– செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்றும்போதே விமல் வீர­வன்ச எம்.பி. இதனைத் தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

இந்­தி­யா­வு­னுடன் சீபா உடன்­ப­டிக்கை செய்து கொண்­ட­போது இந்­தியா எமது பொரு­ளா­தா­ரத்தைக் கைப்­பற்றும் ஆபத்து ஏற்­படும் இது தொடர்பில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யது எனவே இது தற்­கா­லி­க­மாக இடை நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் இன்று அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம முன்னணி வர்த்­தக அமைப்­பொன்றில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யாடலில் கருத்து தெரி­வித்­த­போது,இந்­தி­யா­வுடன் சீபா ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­ப­டாது. அதற்கு பதி­லாக வேறு பெயரில் வேறொரு உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­படும் என்று கூறி­யி­ருந்தார். ஆனால் எந்தப் பெயரில் அது கையெ­ழுத்­தி­டப்­பட்­டாலும் அது இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு ஆபத்­தா­ன­தாகும்.

ஒரு­புறம் இவ்­வா­றான உடன்­ப­டிக்­கை­யொன்று கையெ­ழுத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. மறு­புறம் தனுஷ்­கோ­டி­யி­லி­ருந்து 22 கிலோ மீட்டர் தூரத்­துக்கு இலங்­கைக்­கான தரை­வ­ழிப்­பாதை அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மூலம் இந்­தி­யா­விடம் இலங்­கையை தாரை வார்த்து இந்­தி­யாவின் 26 ஆவது மாநி­ல­மாக இலங்கை மாற்­றப்­படும்.அத்­தோடு தனுஷ்­கோடி ஊடாக இந்­தி­யாவில் தொழில் இல்­லாமல் சுற்­றித்­தி­ரிவோர் தொழி­லா­ளர்­க­ளாக இங்கு வரும் ஆபத்தும் உள்­ளது.

பல இலட்­சக்­க­ணக்­கான இந்­தி­யர்கள் இவ்­வாறு எமது நாட்­டிற்குள் புகுந்தால் எம்­ம­வர்­க­ளுக்கு தொழில் இல்லாமல் போய்விடும். அத்தோடு புலம்பெயர் புலிகளுக்கு இங்கு வர சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மீண்டும்...

2023-09-24 19:35:21
news-image

எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு ...

2023-09-24 19:27:05
news-image

இன்றைய வானிலை

2023-09-25 06:52:41
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம்...

2023-09-24 19:26:01
news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41