மாந்தை மேற்கில் பிரதேச இலக்கிய விழா - எட்டு கலைஞர்களுக்கு விருதுகள்!

Published By: Daya

03 Nov, 2018 | 10:31 AM
image

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலக கலாச்சாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபை இணைந்து நடத்திய 'பிரதேச இலக்கிய விழா' நேற்று மாலை மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற   பிரதேச இலக்கிய விழா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மடு வலயக் கல்விப்பணிப்பாளர் கே.சத்தியபாலன், மாவட்ட அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் பி.எம்.செபமாலை,மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் எஸ்.சௌந்தர நாயகம்,ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.அந்தோனி முத்து ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

யேசுதாசன் சாரா நீராஜா(சித்திரக்கலை),சி.பெலிக்ஸ் ஜெனிவர் (சித்திரக்கலை),எ.டெலிஸ்ரன் நிஸாந்(மிருதங்க இசை) ஆகிய மூவருக்கும் இளம் கலைமதி விருது வழங்கி வைக்கப்பட்டதோடு, சந்தியாப்பிள்ளை அருளானந்தம்(இசை,கீ போட்வாத்தியக்கலை), பெரியசாமி முத்துக்கருப்பன் (பாடல் எழுத்துருவாக்கம்) முஹமட் இமாம் ஹன்பர் (எழுத்தாளர்,இயற்துறை), வேலு சந்திரகலா (எமுத்தாளர்,பல்கலைகள்),கலாபூசணம் கிறிஸ்தோகு சந்தியோகு (மிருதங்க இசை) ஆகிய ஐவருக்கும் கலைமதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி...

2024-06-12 17:40:25
news-image

கொழும்பில் 'கம்பன் விழா 2024' நிகழ்வுகள்...

2024-06-12 11:10:59
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் வருடாந்த...

2024-06-11 14:23:16
news-image

8ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு...

2024-06-11 09:59:13
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் இலக்கியக்களம்...

2024-06-10 18:59:40
news-image

அராலி வடக்கு ஞான வைரவர் ஆலய...

2024-06-10 18:51:58
news-image

யாழில் ஐ.டி.எம். நேஷன் கம்பஸின் கிளை...

2024-06-10 18:14:16
news-image

யாழ் வந்தார் பிரபல கர்நாடக இசைப்...

2024-06-10 17:46:23
news-image

கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய மஹா...

2024-06-09 19:19:58
news-image

பலாலியில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச கடல்...

2024-06-09 20:13:24
news-image

யாழில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக்களம்

2024-06-09 15:34:40
news-image

உலக சுகாதார ஸ்தாபனத்தின் விருதை வென்றது...

2024-06-08 17:21:41