கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.வியாழேந்திரன்  சற்றுமுன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதேநேரம் எஸ்.பி நாவின்ன கலாசார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும்  பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று  பதவிப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.