புத்தளம் - சிலாபம் பகுதியில் மாலை நேர தனியார் வகுப்பை நடத்திவந்த ஆசிரியரொருவர் குறித்த வகுப்பில் கல்வி  பயிலும் மாணவி மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவி மீதே குறித்த ஆசிரியர் தாக்கியுள்ள நிலையில் , ஆசிரியர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலைத் தொடர்ந்து பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பேரிலேயே  குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் சந்தேகநபர் சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.