நியூஸிலாந்தில் ஹமில்டன் நகரைச் சேர்ந்த சாராஹ் நாதன் என்ற பெண்ணுக்குச் சொந்தமான பூனை நள்ளிரவு வேளைகளில் அயல் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் காலுறைகள் என்பவற்றை திருடும் விநோத பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெ ளியிட்டுள்ளன.

6 வயதான பிறைட் என்றழைக்கப்படும் இந்தப் பெண் பூனையால் கடந்த இரு மாத காலப் பகுதியில் 11 ஜோடி ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் 50 க்கு மேற்பட்ட ஆண்களின் காலுறைகள் என்பன களவாடப்பட்டுள்ளதாக சாராஹ் தெரிவிக்கிறார்.

அந்தப் பூனை தன்னால் களவாடப்பட்டவற்றை சாராஹின் வீட்டின் பின்பத்திலிருந்த மறைவான பகுதியில் பதுக்கி வைத்திருந்துள்ளது.

அந்தப் பூனை எவ்வாறு ஆண்களுடைய உள்ளாடைகள் மற்றும் காலணிகள் என்பவற்றை சரியாக இனங்கண்டு திருடுகிறது என்பது புரியாத புதிராக உள்ளதாக அவர் கூறுகிறார்.