(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்ட வேண்டிய அவசியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது. எனினும் பெரும்பான்மையை காட்டுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

ரணில் விக்ரமசிங்கவே அவரது பெரும்பான்மையை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசிலமைப்பிற்கு முரணாக செயற்பட்டிருந்தால் யார் வேண்டுமானாலும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம் எனவும் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்  இ ன்  று  இடம்பெற்றது.