சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து ஒரு தொகை நாணயத்தாள்களை கடத்தி செல்ல முற்பட்ட நபர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று காலை டுபாயி நோக்கிய செல்லுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரின் பயண பொதியை சோதனையிட்டபோது, மறைத்து வைத்திருந்த ஒரு தொகை நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 19,250 ஸ்டெர்லிங் பவுண்ஸ், 29,000 யூரோ மற்றும் 20,000 சுவிஸ் பிரான்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி சுமார் 92 இலட்சத்து 37ஆயிரத்து 966 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை குறித்த நபரிடமிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தியுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM