இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.இந்தியாவிலிருந்து சட்டவிராதமான முறையில் கடத்தி வரப்பட்ட இலங்கையில் தடைசெய்யப்பட்ட சக்திவாய்ந்த போதை மாத்திரைகளுடன் ஒருவர் மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிததார்.

இன்றுகாலை (02) பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை பிரதேசத்தில் குறித்த போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த போதை மாத்திரை ஒன்றின் விலை 1000 ரூபாயாகும்.மொத்தமாக 140 மாத்திரைகள் குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.