கிண்ணியா கடற்கரையோரங்களில் அதிகளவான மீன்கள் நேற்று வியாழக்கிழமை இறந்து காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கடற்கரையோரங்களில் இறந்த மீன்கள் ஒதுங்கியுள்ளன.

இதற்குறிய காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை என்றும் இதுதொடர்பாக மீனவர்கள் மீன்பிடி திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.