நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது கூடி ஆராய்ந்து வருகின்றது.குறிப்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கா? அல்லது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கா? ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில், கூட்டமைப்பின் குழு கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் தற்போது இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமது தீர்மானத்தை அறிவிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது கொழும்பில் கட்சி குழு கூட்டத்தை நடத்தி வருகின்றது.