பண்டாரகம, ஹொரணை பிரதான வீதியின் குலுபன சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹொரணை தீயணைப்பு பிரிவினருக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனமொன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. 

இந்த விபத்தின் போது அம்பியூலன்ஸ் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் பிரதேசவாதிகளினால் மீட்கப்பட்டு, ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.