மத அவமதிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அசியா பீபி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளார்.
பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய அசிய அந் நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தனது அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது முகமது நபியை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக மத அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேற்படி வழக்கை விசாரத்தி நீதிமன்றம் அசிய பீபிக்கு மரண தண்டனை விதித்தது. எனினும் மேன்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் அசியாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கண்டித்து நேற்று முதல் பாகிஸ்தானின், ராவல்பிண்டி உள்ளிட்ட இடங்களில் அசியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்போது அசியாவைப் பொது வெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மற்றொரு பக்கம் பாகிஸ்தானில் அரசியலைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்போது அசியா போன்ற அப்பாவிகள் பாதிக்கப்படமாட்டர்கள் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தும் வருகின்றனர்.
இந் நிலையிலேயே வன்முறையாளர்களினால் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அசியாவின் சகோதரர் ஜேம்ஸ் கூறும்போது,
எனது சகோதரிக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர அசியாவுக்கு வேறு வழி இல்லை. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அசியாவுக்கு அடைக்கலம் தருவதாக தெரிவித்துள்ளன. அசியாவின் கணவர் அவர்களது குழந்தைகளுடன் பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தான் வந்திருக்கிறார். அசியாவின் விடுதலைக்காக அவர்கள் காத்திருக்கின்றனர் என்றார்.
இந் நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் அசியாவின் விடுதலைக்கு எதிராக மதவாத அமைப்புக்களும், கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளதுடன், இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM