”வவுனியா நகரசபைத் தீர்மானம் நிறைவேற்றி 6 மாதங்கள் கடந்தும் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை”

Published By: Daya

02 Nov, 2018 | 02:09 PM
image

உழவு இயந்திரம் உடைந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் மேற்கொண்ட நகரசபை சுகாதாரத் தொழிலாளியான லோறன்ஸ் டயசிங் என்ற தொழிலாளிக்கு இடுப்பில் ஏற்பட்ட பலமான தாக்கம் காரணமாக சத்திரசிச்சை மேற்கொள்ளப்பட்டு 03.08.2016 தொடக்கம் 08.01.2017 அன்று வரை தொடர்ந்து சிகிச்சை பெற்றுள்ளா

வவுனியா நகரசபையில் சுகாதாரத் தொழிலாளி ஒருவருக்கு வழங்கப்படவேண்டிய கொடுப்பனவுகளை வழங்கவேண்டும் என்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகரசபை உறுப்பினர் அப்துல் பாரியினால் முன்மொழியப்பட்டு நகரசபை உறுப்பினர் நா. சேனாதிராசாவினால் வழிமொழியப்பட்டு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தீர்மானம் நிறைவேற்றி கடந்த 6மாதங்களான நிலையிலும் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பாதிக்கப்பட்ட  தொழிலாளிக்கு வழங்கப்படவேண்டிய கொடுப்பனவுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று இலங்கை தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடமையின் நிமித்தம் நகரசபை சுகாதாரத் தொழிலாளி திண்மக்கழிவு அகற்றும் உழவு இயந்திரத்தில் கடமைக்குச் சென்றபோது உழவு இயந்திரம் உடைந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் மேற்கொண்ட நகரசபை சுகாதாரத் தொழிலாளியான லோறன்ஸ் டயசிங் என்ற தொழிலாளிக்கு இடுப்பில் ஏற்பட்ட பலமான தாக்கம் காரணமாக சத்திரசிச்சை மேற்கொள்ளப்பட்டு 03.08.2016 தொடக்கம் 08.01.2017 அன்று வரை தொடர்ந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

அக்காலத்தில் கடமைக்குச் சமூகமளிக்கவில்லை அவர் திரும்ப மீளக் குணமடைந்து 09.01.2018 அன்று கடமைக்கு சமூகமளித்துள்ளார். மேற்படி காலப்பகுதியில் கடமையில் ஏற்பட்ட விபத்துக்காரணமாக வைத்திய அனுமதி விடுமுறை வழங்குமாறு வைத்தியர் சிபாரிசு செய்துள்ளார்.

எனவே குறித்த ஊழியருக்கு விபத்து விடுமுறையை சம்பளத்துடன் விடுமுறையாகக்கணிப்பதற்கு சபையினரிடம் அனுமதி கடந்த 25.04.2018 அன்று சபை அமர்வின்போது கோரப்பட்டது. இவ்விடயம் ஆராய்ந்து சபையினால் கலந்தாலோசிக்கப்பட்டு அரச சேவை நடைமுறைக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பது என ஏகமனதமாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட வினாவுக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை நகரசபை உறுப்பினர் அப்துல் பாரி முன்மொழிந்துள்ளதுடன் நகரசபை உறுப்பினர் நா. சேனாதிராசா வழிமொழிந்திருந்தார். 

இந்நிலையில் நகரசபையின் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு கடந்த 6 மாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த தொழிலாளிக்கு கொடுப்பனவுகள் சம்பளம் அற்ற விடுமுறையாக வழங்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக வழங்கப்படவேண்டிய கொடுப்பனவுகள் விடுமுறைகள் என எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை.

நகரசபையின் உறுப்பினர்கள் மத்தியில் எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும் பாதிக்கப்பட்ட நகரசபை ஊழியருக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்று இலங்கை தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் செல்வேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

2025-11-08 10:33:10
news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45
news-image

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி...

2025-11-08 08:45:42
news-image

இன்றைய வானிலை

2025-11-08 06:05:57