சவுதி அரேபியாவை சேர்ந்த இரு சகோதரிகள் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

சவுதி அரேபியாவை சேர்ந்த டலா பெரியாவும்,(16)ரொட்டானா பரியாவும்(24) ஹட்சன் ஆற்றுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களின் உடலில் எந்த வித காயங்களும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரிகள் இருவரும் அமெரிக்காவில் புகலிடம்கோரி விண்ணப்பித்திருந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சகோதரிகள் இருவரும் தங்கள் தாயுடன் 2015ம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்தனர்  என தெரிவித்துள்ள அதிகாரிகள் சகோதரிகள் இருவரும் வீட்டைவிட்டு ஓடும் பழக்கமுள்ளவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அவர்கள்தங்கியிருந்த வீட்டிலிருந்து 250 மைல் தொலைவில் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டமை மர்மமாக  உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவர்கள் சடலமாக மீட்கப்படுவதற்கு முதல் நாள் சவுதி தூதரகத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று  வந்ததாக தெரிவித்துள்ள செய்திச்சேவையொன்று அவர்களை அமெரிக்காவிலிருந்து  வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.