நளாந்தம் நடைபயிற்சியை மேற்கொண்டால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும் என வைத்தியர் ஸ்ரீதேவி தெரிவித்தார்.

 தங்களின் வருவாய்க்கு ஏற்ற அளவிற்கு, நடைமுறை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள். ஏனெனில் சமுதாயத்தில் மின்னணு பண பரிவர்த்தனை, இணையதள சேவை, இணைய தள சந்தை, சமூக வலைத்தளத்தின் வரிவான பயன்பாடு மற்றும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் எம்முடைய நாளாந்த பணிகள் வீட்டில் அமர்ந்தபடியே செய்து விடுகிறோம். இதனால் உடலுழைப்பு என்பது மிகவும் அரிதாகிவிட்டது. 

உடலுழைப்பு இருந்தால் மட்டுமே ஆரோக்கியத்திற்காக எம்முடைய உடலில் இயல்பாக சுரக்கும் எண்டார்பின் என்ற ஹோர்மோன் சுரப்பியில் மாற்றம் ஏற்படுகிறது. இது பல வகையினதான ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அத்துடன் நீரிழிவு, குருதி அழுத்தம், இதய பாதிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது அல்லது இவைகள் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது. அதனால் எத்தனை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும் உடலுழைப்பை ஒருபோதும் கைவிடக்கூடாது.

உடலுழைப்பு என்றவுடன் பலரும் பலவகையினதான கற்பனைகளில் முழ்கிவிடுவர். வைத்திய துறையைப் பொருத்தவரை உடலுழைப்பு என்பது தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது கூட உடலுழைப்பு தான்.

அலுலவகம் அல்லது வீட்டில் மாடிப்படி இருந்தால் மின்தூக்கியை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். அருகிலுள்ள கடைகள் மற்றும் வங்கிகளுக்கு நடந்து சென்று வாருங்கள். தொலை பேசும் போது நடந்து கொண்டே பேசுங்கள்.

யாரைவது சந்தித்து உரையாடவேண்டும் என்றால் பூங்கா அல்லது மொட்டை மாடியில் காலாற நடந்துகொண்டே பேச்சு வார்த்தையில் ஈடுபடுங்கள். இதையெல்லாம் நடைமுறைப்படுத்து கடினம் என்று எண்ணினால் தினமும் எண்பது நிமிடம் நடக்கவேண்டும்.

அதிலும் ஒரு நிமிடத்திற்கு 80 அடிகள் எடுத்து வைத்து நடக்கவேண்டும். இத்தகைய நடைபயிற்சியை மேற்கொண்டால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் ஆரோக்கிய பராமரிப்பாக சுரக்கவேண்டிய எண்டார்பின் என்ற ஹோர்மோனின் சுரப்பி இயல்பாக தன் பணியை செவ்வனே செய்யும். மனமும் அமைதியாக இருக்கும். உற்சாகத்துடன் அனைத்து பணிகளையும் செய்து மகிழ்ச்சியுடன் வாழலாம்.