பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென கோரி இரத்தினபுரி அபுகஸ்தென்ன பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

அபுகஸ்தென்ன தோட்டத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், இளைஞர், யுவதிகள், பிரதேச சபை உறுப்பினாகள். அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து நேற்று அபுகஸ்தென்ன தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் பிரதான வீதி வழிமறைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

'முதலாளிமார் சம்மேளனம் தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளத்தை கூட்டு? தோட்டத் தொழிலாளர்களின் கஷ்டங்களை உணர்ந்து பார்? தோட்ட மக்களை பட்டியாக கொல்லாதே? தோட்டத் தொழிலாளர்களின் இரத்தத்தில் சொகுசு வாழ்கையை நடத்தி வரும் முதலாளிமார் சம்மேளனம் உடனடியான தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கு? என்று பல்வேறு கோஷங்ளையும் எழுப்பி பதாதைகளையும் கருப்பு கொடிகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக அபுகஸ்தென்ன பிரதான வீதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.