"சட்டவிரோத கைகோர்ப்புக்கு பாராளுமன்றம் திங்கள் பதிலளிக்கும்"

Published By: Vishnu

01 Nov, 2018 | 06:34 PM
image

(நா.தினுஷா) 

மைத்திரி - மஹிந்தவின் சட்டவிரோத கைகோர்ப்புக்கு திங்கட்கிழமை பாராளுமன்றம் பதிலளிக்கும். 5 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியை இராஜநாமா செய்வாரானால் குறித்த ஒரு வருடத்துத்துக்கான ஜனாதிபதியினை அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி, நான்கரை வருடங்கள் நிறைவடையும் வரை ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உரிமை இல்லை எனவும் சுட்டிகாட்டியுள்ளது. 

ஜனநாயக போராட்டத்தின் முதல் போராட்டத்தில் வெற்றிகொண்டுள்ளதோடு நாட்டில் தூய்மையான அரசியல் கலாசாரத்தை கொண்டுவரும் வரை ஐக்கிய தேசிய கட்சியின் இந்த போராட்டம் முடிவடையாது என்றும் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இதனை குறிப்பிட்டார். 

பெரும்பான்மையை நிரூபித்து பெரும்பான்மை பலத்தை பெற்ற ஒருவர் பிரதமராக நியமிக்கும் வரை அலரிமாளிகையை விட்டு வெளியேற போவதில்லை என சவால் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி இன்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில்...

2025-03-24 17:50:42
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான...

2025-03-24 17:59:04
news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

பிரதமர், சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின்...

2025-03-24 18:18:59
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26
news-image

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட...

2025-03-24 16:06:47
news-image

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய...

2025-03-24 15:44:19