தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எழுத்து மூலமான உத்தரவாதம் தரப்படவேண்டும் எனத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நாங்கள் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் எனத் தெரிவித்தார்.

தற்போது எழுந்துள்ள அரசியல் குழப்ப நிலையில் எத்தகைய முடிவு எடுக்கப்படவேண்டும் எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு அதை செய்வார் இதைச் செய்வார் என்ற சொல்லுவது முட்டாள் தனமான கருத்தாகும். அதற்காக நாங்கள் கண்மூடித்தனமாக  ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை. 

ரணில் விக்கிரம சிங்க எங்களுக்கு அரசியல் தீர்வுக்கான எழுத்து மூல ஆவணத்தைத் தரவேண்டும். சர்வதேச சமூகத்தின் உத்தரவாதம் எங்களுக்கு இருக்க வேண்டும். சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் எழுத்து மூல ஆவணத்துடனும் தான் நாங்கள் இன்றுள்ள நாட்டில் ஒரு முடிவை எடுக்கக் கூடியதாக இருக்கும்.

ஆகவே இதுவரைக்கு நாங்கள் யாருக்கும் ஆதரவு வழங்குவது என்ற  நிலைக்கு  செல்லவில்லை ரணில் விக்கிரம சிங்க எங்களுக்கு எழுத்து மூல ஆவணத்தை தந்தவர் ஆனால் அவர் எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை . அவர் ஓரு ஜனநாயகம் உள்ளவர் நம்பிக்கைக்குரியவர் என்றும் குறிப்பிடமுடியாது .